இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலி - காசா சுகாதாரத்துறை தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல்  ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், நிவாரண உதவிக்காக காத்திருந்த 20 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், குறிப்பிட்ட கட்டடத்தின் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் கூறியுள்ளது. இதனிடையே காசாவில் காப்பகம் ஒன்றின் மீது நேற்று நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

varient
Night
Day