இரவில் தனியாக செல்ல பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரம் அபுதாபி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரமாக அபுதாபி திகழ்வதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், அபுதாபியில் வசிக்கும் 160-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 92 ஆயிரத்து 576 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், 73 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்துடன் செலவழித்த நேரத்தால் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. வருமானத்தை பொறுத்தவரையில் 34 சதவீதம் பேர் குடும்ப வருமானத்தில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் தனிநபர் வருமானத்தில் 64 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நகரின் பாதுகாப்பை பொறுத்தவரையில் இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாக 93 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. 

Night
Day