இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு குறுகிய கால விசாக்களை நிறுத்தியது சவுதி அரேபியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹஜ்ஜை முன்னிட்டு, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு குறுகிய கால விசாக்களை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது
.
வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்கு முன்னதாக பயணிகள் வருகையை சிறப்பாக நிர்வகிக்கும் ஒரு முயற்சியை சவுதி அரசு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் எகிப்து உள்ளிட்ட 14 நாடுகளின் குடிமக்களுக்கு புதிய குறுகிய கால விசா வழங்குவதை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. இந்த மாதம் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த இடைநீக்கம், வணிகம், சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்களுக்கு பொருந்துமென கூறப்படுகிறது.  ஏற்கனவே செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருக்கும் இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஏப்ரல் 13 வரை உள்ளே அனுமதிக்கப்படுவர், ஆனால் ஏப்ரல் 29-க்குள் வெளியேற வேண்டும் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day