இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிட்டன் மன்னர் 3ம் சார்லசுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. 

பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ் கடந்த சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இதையடுத்து, லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, மன்னர் 3ம் சார்லசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை வழக்கம் போல மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day