அலெக்ஸி நவால்னிக்கு அஞ்சலி செலுத்தத் திரண்ட ஆதரவாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் மர்மமான முறையில் சிறைக்குள் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அலெக்ஸி நவால்னியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்தநிலையில், மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செயிண்ட் பீட்ட்ரஸ்பர்க் உள்பட பல முக்கிய நகரங்களில் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுவரை 401 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day