அமெரிக்காவில் பரபரப்பு - டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இருந்த இடம் அருகே துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் இருந்தபோது வீட்டுக்கு அருகாமையிலேயே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் டிரம்ப் பத்திரமாக உள்ளதாகவும் அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேறு விரிவான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தநிலையில் அவர் இருந்த  இடம் அருகே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day