அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் குஜராத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் தெற்கு கரோலினாவில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஆண் நண்பருடன் காரில் சென்றுள்ளனர். அந்த நபர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற நிலையில், கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள பாலத்தின் மீது மோதி, 20 அடி உயரத்திற்கு பறந்து சென்று சாலையின் மறுபுறம் உள்ள மரத்தில் மோதி கார் உருக்குலைந்தது. இதில் 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, காரை ஓட்டியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

varient
Night
Day