எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை நாட்டு அர்ப்பணிக்க உள்ளார். முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ள நிலையில், அவற்றின் சிலவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் 55 சதவீதம் உத்தரபிரதேசத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன என்றார்.
செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் தன்னம்பிக்கையை உத்தரபிரதேசம் வலுப்படுத்தும் என்ற பிரதமர் மோடி, நமது படைகள் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புவதாக கூறினார்.
இந்தியாவில் ஒரு துடிப்பான பாதுகாப்புத் துறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்றும், மிக விரைவில், ரஷ்யாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில், AK-203 துப்பாக்கிகளை உற்பத்தி செய்யத் தொடங்குவோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜிஎஸ்டியில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சி கதைக்கு சிறகுகள் கொடுக்கும் எனக்கூறிய பிரதமர் மோடி, முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டினார். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த தொடர்ந்து, வரிகளைக் குறைப்போம் எனவும், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் செயல்முறை தொடரும் எனவும் பிரதமர் மோடி பேசினார்.