60 வயது முதியவர் சுத்தியால் அடித்து கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி மங்களம் அருகே 60 வயது முதியவரை மர்ம நபர்கள் சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணுவாபேட்டை பகுதியை சேர்ந்த வேதகிரி என்பவர் தனது வீட்டிலேயே இரும்பு பட்டரை வைத்து தொழில் செய்து வந்தார். வழக்கம் வேலைகளை முடித்தப்பின், அங்கேயே மது அருந்திவிட்டு உறங்கியுள்ளார். கணவர் வேதகிரியை எழுப்புவதற்காக பட்டறைக்குச் சென்ற அவரது மனைவி, ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தகவல் அறிந்த வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வேதகிரி சுத்தியால் அடித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day