6-ம் தேதி டெல்லியை நோக்கி பயணம் - விவசாயிகள் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 6ம் தேதி மீண்டும் டெல்லியை நோக்கி முன்னேற உள்ளதாகவும், 10ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். அவர்களை பஞ்சாப்- அரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்து போலீசார் நிறுத்தியுள்ளனர். அவர்கள் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் 6ம் தேதி மீண்டும் டெல்லியை நோக்கி முன்னேற உள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 10ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்திற்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

varient
Night
Day