5 ஆண்டுகளும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன் - நவ்யா ஹரிதாஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரியங்கா காந்தி போல அல்லாமல், 5 ஆண்டுகளும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன் என உறுதியளிப்பதாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கூறியுள்ளார். 


வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பேட்டியளித்த நவ்யா ஹரிதாஸ், வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார். வாக்குசேகரிப்பின் போது பாஜக தொண்டர்களிடம் இருந்து மட்டுமின்றி, பொதுமக்களிடம் இருந்தும் தமக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அவர் கூறினார். வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பிரியங்கா காந்தி, 7 நாட்கள் சுற்றுப் பயணமாக இங்கு வந்திருப்பதாகவும் பின்னர் அவர் திரும்பிச் சென்று விடுவார் என்று குறிப்பிட்ட நவ்யா ஹரிதாஸ், ஆனால் வரும் 5 ஆண்டுகளும் வயநாடு மக்களுடன் இருப்பேன் என்று உறுதியளிப்பதாகவும் கூறினார்.


varient
Night
Day