2023 -24ல் பாஜக வருவாய் ரூ.4,340.5 கோடியாக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 2023 - 2024 நிதியாண்டில், பாரதிய ஜனதாவின் வருவாய் 83 சதவீதமும், காங்கிரசின் வருவாய், 170 சதவீதமும் உயர்ந்துள்ளது.

2023 - 2024ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன.அதன்படி, பா.ஜ.,வின் ஆண்டு வருவாய் 83 சதவீதம் உயர்ந்து, 4 ஆயிரத்து 340.5 கோடி ரூபாயாக அதிகரித்தது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டும், ஆயிரத்து 685 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. காங்கிரசின் வருவாய், 452 கோடி ரூபாயில் இருந்து, ஆயிரத்து 225 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 170 சதவீத உயர்வாகும்.

Night
Day