விமான நிலையத்தில் ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பை விமான நிலையத்தில் அட்டைப்பெட்டிகள் மூலம் கடத்தி வரப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 

அப்போது, 13 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day