ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல், சாலை, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் - முதல்வர் ரேகா குப்தா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் 27 ஆண்டுகளுக்‍கு பிறகு ஆட்சி அமைத்துள்ள பாஜகவின் முதலமைச்சர் ரேகா குப்தா ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்‍கல் செய்தார்.

டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா வசம் நிதித்துறை உள்ளதால், அவர் டெல்லி சட்டப்பேரவையில் இன்று 2025-26ம் ஆண்டுக்‍கான பட்ஜெட்டை தாக்‍கல் செய்தார். கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட இந்த ஆண்டு பட்ஜெட் தொகை 31.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. வரலாற்று புகழ்மிக்‍க பட்ஜெட்டை தாக்‍கல் செய்துள்ளதாகவும், முறைகேடான மற்றும் திறமையற்ற அரசின் காலம் முடிந்துவிட்டதாகவும் முதலமைச்சர் ரேகா குப்தா குறிப்பிட்டார். அரசு முதலீட்டு செலவினத்தை 28 ஆயிரம் கோடி ரூபாயாக இரு மடங்கு உயர்த்தியுள்ளதாகவும், இது சாலைகள், குடிநீர், கழிவு நீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்‍காக செலவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Night
Day