மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் அமளி மற்றும் போராட்டத்தை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. மணிப்பூர் மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக இந்திய கூட்டணி தொடக்கம் முதலே அமளியில் ஈடுபட்டு வந்ததால் அவ்வப்போது மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் என உச்சரிப்பது எதிர்க்கட்சிக்கு ஃபேஷனாகிவிட்டதாகவும், இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என பேசியது பெரும் சர்ச்சையானது. 

இதனால் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் பங்கேற்ற பிரதமர் மோடியை நோக்கி, எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷங்களை எழுப்பினர். 

Night
Day