மக்களவை ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பரபரப்பான சூழலில் இன்று தொடங்கி உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவை கூடியதும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் துவங்கியதும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஆபரேசன் சிந்தூர் குறித்து உடனடியாக விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக, அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். 

Night
Day