பொதுத்துறை வங்கிகள் சீரமைப்புக்‍காக ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கீடு : இந்திய ரிசர்வ் வங்கி 90வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொதுத்துறை வங்கிகளின் சீர்த்திருத்தங்களுக்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ரிசர்வ் வங்கி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கிய இந்திய ரிசர்வ் வங்கி, இன்று 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய அவர், வங்கிகள் சீரமைப்புக்‍காக மேற்கொண்ட பணிகள் குறித்து பட்டியலிட்டார். அதில் திவாலான நிலையில் இருந்த பொதுத்துத்துறை வங்கிகளுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி வழங்கி மீட்டெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.. வ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Night
Day