இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் திருச்சூர் வரை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. அரபி கடல் பகுதியில் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் காணப்படும். இதற்கு மாறாக நேற்று மாலை முதல் திடீரென கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் அருகேயுள்ள பூவார் முதல் திருச்சூர் வரை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது. வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்ட திடீர் புயலால் கடல் சீற்றம் காணப்படுவதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடல்சீற்றம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனிடையே, திருவனந்தபுரம் அருகே கடற்சீற்றத்தால் முதலைபொழி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த 3 மீனவர்களில், 2 பேரை சக மீனவர்கள் காயங்களுடன் மீட்டனர். மாயமான ஒருவரின் கதி என்னவென்று தெரியவில்லை.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...