புதுச்சேரி : ரவுடிகள் வீடுகளில் அதிகாலை முதலே போலீசார் அதிரடி சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் புதுச்சேரியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் அதிகாலை முதலே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் அதிகாலை முதலே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ரவுடிகளின் வீடுகளில் ஆயுதம், நாட்டு வெடிகுண்டு உள்ளிட்டவைகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும், 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day