புதுச்சேரி - கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்  மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நள்ளிரவு முதல் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

varient
Night
Day