இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
பா.ஜ.க. உதாசீனப்படுத்தினால் எங்களோடு இணையுங்கள் என நிதின் கட்கரிக்கு, உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் நிதின் கட்கரி பெயர் இடம்பெறாததால் பலத்த சர்ச்சை எழுந்தது. ஆனால் மகாராஷ்டிரா கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு ஏற்படாததால், நிதின் கட்கரி பெயர் இடம்பெறவில்லை என பா.ஜ.க. விளக்கமளித்தது. இந்நிலையில் பா.ஜ.க. உதாசீனப்படுத்தினால் எங்களோடு இணைந்து விடுங்கள் என நிதின் கட்கரிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்திருந்த நிலையில், பா.ஜ.க.வின் 2-வது பட்டியலில் நிதின் கட்கரி பெயர் கண்டிப்பாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...