பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நடத்திய பல்முனை தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிப்பு - இந்திய ராணுவம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் நடத்திய பல்முனை தாக்குதல்கள் நடுவானிலேயே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை முறியடித்தது தொடர்பான வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம், மே 8 ஆம் தேதி இரவு மற்றும் நள்ளிரவில் பாகிஸ்தான் படைகள் மேற்கத்திய எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இத்துடன் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பல முறை துப்பாக்கி சூடு நடத்தி இருப்பதாகவும், அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்துடன் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பை காப்பதில் உறுதியாக இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Night
Day