இந்தியா
ஆதாரை 12வது ஆவணமாக ஏற்றிடுக - தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்கவும் ஆதார் அட்டையை 12வது ஆவணம...
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த 5 பேர், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். வனோத்ரி அருகே சையத் நகரில் வசிக்கும் ஷாஹிஸ்தா அன்சாரி என்ற பெண், தனது குடும்பத்தில் உள்ள 4 சிறுவர்களை பருவமழையை ரசிப்பதற்காக புஷி அணைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் சிறுவர்கள் உட்பட 5 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில், அமிமா அன்சாரி மற்றும் சிறுவர்கள் உமேரா அன்சாரி, ஷாஹிஸ்தா அன்சாரி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மாயமான மற்ற இரு சிறுவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்கவும் ஆதார் அட்டையை 12வது ஆவணம...
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்இளநீர் வியாபாரி க?...