தண்டனை காலத்தை விட கூடுதலாக சிறை - அடைக்கப்பட்ட நபருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தண்டனை காலத்தை விட கூடுதலாக சிறையில் அடைக்கப்பட்ட நபருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2004ம் ஆண்டு பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நபர், தண்டனை காலம் முடிந்த பிறகும் தண்டனை அனுபவித்து வந்ததாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் அமர்வு,  மத்தியப்பிரதேச அரசின் தவறாலேயே ஒருவர் தனது தண்டனை காலத்தை விட கூடுதலாக சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஆகவே பாதிக்கப்பட்ட நபருக்கு 25 லட்சரூ பாயை மத்தியப்பிரதேச அரசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.  

Night
Day