நீட் முறைகேடு வழக்கு : தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வில் சிறிதளவு தவறு நடந்திருந்தால் கூட அதை முறையாக விசாரிக்க வேண்டும் என கூறினர். மேலும் வினாத் தாள் கசிவு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் நோட்டிஸ் வழங்கினர். தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Night
Day