நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் குறித்து பெருமை கொள்கிறேன் - நியூசிலாந்து பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியூசிலாந்தின் வளர்ச்சிக்கு பெரிய அளவில பங்களிப்பு வழங்கும்  இந்திய சமூகத்தினர் குறித்து பெருமைகொள்வதாக நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள கிறிஸ்டோபர் லக்சன், இந்திய தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய இனமாக இந்தியர்கள் திகழ்வதாக குறிப்பிடுள்ளார். நியூசிலாந்தில் உள்ள திறன்சார்ந்த தொழிலாளர்களில் இந்தியர்கள் பெரிய அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்தின் முன்னேற்றத்திற்காக நியூசிலாந்து மக்களுடன் இந்தியர்களும் பெரிய அளவில் பங்களிப்பதாக தெரிவித்துள்ளார்.

Night
Day