எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது. விநாயகர் அவதரித்த இந்நாளை இந்துக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறன்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுவதும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, சுண்டல், கொழுக்கட்டை போன்ற உணவுகள் படைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டு வருகின்றனர்.
இதையொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலான சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது. விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி விநாயகரை வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரபல மணற் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசாா மாநிலம் புரி கடற்கரையில் மணலில் பிரமாண்ட விநாயகர் உருவத்தை வடிவமைத்துள்ளார். அதில் மேக் இன் இந்தியா திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் செமி கண்டக்டர் உற்பத்தி, பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்டவைகளை குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தேக்டி விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை மனமுருக வழிபாடு செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்த்ரபூரில் உள்ள விநாயகர் கோவிலில் பிள்ளையாருக்கு சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயில் சதுர்த்தியையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளில் ஜொலித்தது. இதையொட்டி பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்களுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேற்கு வங்கத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பிரதிபலிக்கு வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. வடக்கு 24 பர்கானாவில் ஆபரேஷன் சிந்தூர் கருபொருளில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பந்தலில் பகல்ஹாம் தாக்குதல் காட்சிகள், அதற்கு இந்தியாவின் பதிலடி தாக்குதல் உள்ளிட்ட காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தது. போரின் போது பாகிஸ்தானை தாக்கிய பிரமோஸ் ஏவுகணை, இந்திய ராணுவ வீரர்கள் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த விநாயகர் சதுர்த்தி பந்தல் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 69 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 69 அடி உயரத்தில் கம்பீரமாக பிரம்மாண்ட காட்சியளிக்கும் விநாயகரை பக்தர்கள் திரளானோர் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.