தேர்தல் பத்திர விவரங்களை பென்டிரைவ் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு - உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பென் டிரைவில் இரு கோப்புகளாக தேர்தல் பத்திரம் வாங்கியவர்கள், பணமாக்கிய கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மாலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ் குமார் கெரா, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை 22 ஆயிரத்து 217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, வாங்கப்பட்ட தொகை, வாங்கிய நிறுவனம், பணமாக்கிய கட்சிகளின் விவரம் ஆகிய இரு கோப்புகளை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டதாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டது. 22 ஆயிரத்து 30 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டதாகவும், 187 தேர்தல் பத்திரங்கள் இன்னும் பணமாக்கப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரம் வாங்கிய 15 நாட்களுக்குள் அதை பணமாக்காவிட்டால், அத்தொகை பிரதமரின் கவனிப்பு நிதிக்கும் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day