இந்தியா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வே...
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை- பெங்களூர் உள்ளிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில், சலுகை பயண கட்டணங்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை- பெங்களூர், கொச்சி- பெங்களூர், கவுகாத்தி-அகர்தலா, விஜயவாடா-ஹைதராபாத் உள்ளிட்ட சில வழித்தடங்களில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்ய, இம்மாதம் 27 -ஆம் தேதி வரையில், டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, ஆயிரத்து 606 ரூபாய் சலுகை கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா வெப்சைட் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு, ஆயிரத்து 456 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை கட்டண பயணத்தை, நவம்பர் 1-ம் தேதி முதல், டிசம்பர் 10 ஆம் தேதி வரையில், 40 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வே...
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வே...