தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு !

எழுத்தின் அளவு: அ+ அ-


தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 31 வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு நடப்பு ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5 புள்ளி 367 டிஎம்சி தண்ணீர் மற்றும் ஜூலை மாதம் திறக்க வேண்டிய 31 புள்ளி 24 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வறட்சியை காரணம் காட்டி தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும், போதிய நீர் இருப்பு மற்றும் நிலைமையை கருத்தில் கொண்டே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Night
Day