டெல்லி குண்டு வெடிப்பு : உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு தனது இரங்கல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கடவுள் அளிக்க பிரார்த்திப்பதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருவதாக உறுதியளித்தார். விசாரணையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், இந்த துயரத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Night
Day