ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, ஜம்மு -  காஷ்மீர் ரியாசி பகுதியில் பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் காரணமாக பதற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில், நேற்று இரவும் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீசிய ட்ரோன்களை இந்தியா வழிமறித்து அழித்தது. இந்நிலையில் பதற்றம் தணிந்ததை அடுத்து இன்று காலை சம்பா பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. சாலைகளில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டத்தை காண முடிந்தது. ரியாசி பகுதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

Night
Day