இந்தியா
சட்டவிரோத நிலக்கரி சுரங்க வழக்கில் 24 இடங்களில் ED அதிரடி சோதனை
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினால் நாட்டின் பாதுகாப்பற்றதாக மாறிவிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் பற்றிய தமது கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய பதிலளிக்கவில்லை எனக்கூறிய கெஜ்ரிவால், குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டால் நாடு பாதுகாப்பற்றதாகிவிடும் என கூறியுள்ளார். நாட்டின் சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதிக்கும் என கூறியுள்ள கெஜ்ரிவால், வரி கட்டுவோரின் பணத்தை அந்நிய நாட்டிலிருந்து வரும் சிறுபான்மையினருக்கு செலவிடுவது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளார். முன்னதாக தங்கள் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டத்தை கெஜ்ரிவால் எதிர்ப்பதாக அமித் ஷா சாடியது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...