சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து - பவன் கல்யாண் மகன் காயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த தனது 2வது மகனை பார்ப்பதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிங்கப்பூர் விரைந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க் ஷங்கரின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களில் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதே போன்று சக மாணவர்கள் சிலருக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தீக்காயமடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த பவன் கல்யாண், தனது அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, மகனை பார்ப்பதற்காக சிங்கப்பூருக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

varient
Night
Day