சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்.

திருச்சூரில் உள்ள உணவகம் ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் குழிமந்தி பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அப்போது சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து அனைவரும் ருசித்துள்ளனர். இதையடுத்து, பிரியாணி, சிக்கன் சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நுசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மயோனைஸில் நச்சு தன்மை இருந்ததாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

varient
Night
Day