சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - கைதான 3 பேருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்கத்தில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.


கஸ்பா பகுதியில் செயல்படும் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் 24 வயதாகும் மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Night
Day