கோவி ஷீல்டு தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படக் கூடும் என அஸ்ட்ராஜெனிசா நிறுவனம் அதிர்ச்சி தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா பெருந்தொற்றுக்கு பயன்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமென ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவியது. இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இதனையடுத்து, பொதுமக்கள் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். அதன், பின்னர் ஏற்பட்ட மர்ம மரணங்கள் தடுப்பூசியின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பின. அதனை, உறுதி செய்யும் விதமாக ஆஸ்டிராஜெனேகா நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்த உறைவு, ரத்த தட்டணுக்கள் குறைவு போன்ற பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், கோவிஷீல்டு  தடுப்பூசி செலுத்திய பொதுமக்களின் அச்சம் அதிகரித்துள்ளது. 

Night
Day