கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு சுமார் 7 மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் தங்கும் அறைகளின்றி பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இதனிடையே, டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு சென்ற பக்தர்கள் வைகுண்டம் மண்டபத்திற்கு வெளியே சுமார் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடும் கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 24 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்படுவதாகவும், கோடை விடுமுறையில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக, சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Night
Day