கேரளா : பயணச்சீட்டில் தனது உருவத்தை கண்டு நடத்துநர் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் பேருந்தில் சென்ற பயணி ஒருவர், நடத்துநரின் உருவத்தை அச்சு அசலாக அப்படியே வரைந்து கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆசிக் பண்ட்டிக்காடு என்ற ஓவியக் கலைஞர் பேருந்தில் பயணித்தபோது நடத்துநரிடம் இருந்து பயணச் சீட்டை பெறுவதும், பின்னர் சிறிது நேரத்தில் அந்த நடத்துநரின் உருவத்தை தனது கண்களாலேயே ஸ்கேன் செய்து டிக்கெட்டின் பின்புறம் அசத்தலாக வரைந்துள்ளார். தொடர்ந்து அந்த ஓவியத்தை நடத்துநரின் காண்பிப்பதும், அதை கண்டு நடத்துநர் சில வினாடிகள் இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

Night
Day