இந்தியா
மேம்பாலம் இடிந்து 10 பேர் பலி - பிரதமர் இரங்கல்
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
குஜராத் மாநிலம் போர்பந்தரில் 480 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு படகை சோதனை செய்தனர். இதில் 480 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் படகில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல்படை, போதை பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இதுவரை 3 ஆயிரத்து 135 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...