இந்தியா
CLOSEUP, ENO போன்ற பொருட்களை போலியாக தயாரித்த கும்பல் கைது
டெல்லியின் புராரி பகுதியில் CLOSEUP, ENO போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களை போ...
குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கல்விச் சுற்றுலாவில் 23 மாணவர்கள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய படகில் 27 பேர் ஏற்றப்பட்டதுடன் படகில் உயிர் காக்கும் ஜாக்கெட்டுகளும் இல்லாததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர். மேலும் மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
டெல்லியின் புராரி பகுதியில் CLOSEUP, ENO போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களை போ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...