காங்கிரஸ் கட்சியின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 46 வேட்பாளர்கள் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அதில், தமிழகத்தை சேர்ந்த 7 மக்களவை வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்திக் ப.சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர் மற்றும் கன்னியாகுமரியில் விஜய் வசந்த் உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது வருவதால், மிதமுள்ள 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day