கருணாநிதி, இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது - பிரதமர் மோடி கடும் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 1974ல் இந்திராகாந்தி மற்றும் கருணாநிதி கூட்டணியில் இருந்த மத்திய அரசு கச்சதீவை எப்படி இலங்கையிடம் தாரை வார்த்து கொடுத்தது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அளித்த பதிலில், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என ஆதாரம் காட்டப்பட்டபோது, அது ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என இந்தியா சார்பில் ஆதாரம் காட்டவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. 

இதுதொடர்பான செய்தியை மேற்கொள்காட்டி பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக சாடியுள்ளார். அதில், கருணாநிதி மற்றும் இந்திரா காந்தி கூட்டணி கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி அநாகரிகமாக கொடுத்தது என்பது தொடர்பான புதிய உண்மைகள் வெளியாகியுள்ளதாகவும், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரசை ஒருபோதும் நம்ப முடியாது என்பதற்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது ஒரு சான்று எனவும், 75 ஆண்டுகளாக இந்தியாவை பலவீனப்படுத்தும் செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி சாடியுள்ளார்.

Night
Day