கணவர்களை வீட்டில் வைத்து மது அருந்த சொல்லுங்கள் - ம.பி. அமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கணவர்களின் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக இல்லத்தரசிகளுக்கு மத்தியப்பிரதேச அமைச்சர் புதிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். போபாலில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் நாராயண் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசியவர் கணவர்களை வீட்டில் வைத்து மது அருந்த சொல்லுங்கள் என்றும், அதன் மூலம் மதுப்பழக்கத்தை ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தார். குடும்பத்தினர் முன்னிலையில் குடித்தால், அவர்களின் குடிப்பழக்கம் படிப்படியாக குறையும் என்றும் அமைச்சர் நாராயண் சிங் ஆலோசனை தெரிவித்தார். 

varient
Night
Day