கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுகிறது'' - பிரதமர் மோடி விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவும், காங்கிரசும் குடும்பக்‍கட்சிகள் என்றும் கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அதனைத் தொடர்ந்து, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக சாடியுள்ளார்.

தமிழகத்தின் நலனையோ, மீனவர்களின் நலனையோ பாதுகாக்‍க திமுகவுக்‍கு அக்‍கறை இல்லை என்றும், திமுகவும், காங்கிரசும் குடும்ப ஆட்சி செய்வதாகவும் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். மக்‍களை பற்றி ஒருபோதும் அவர்களுக்‍கு கவலை இல்லை என்றும் அவர்களது மகன்கள், மகள்கள் மட்டுமே உயர வேண்டும் என்று காங்கிரசும், திமுகவும் கருதுவதாகவும் பிரதமர் மோடி சாடியுள்ளார். 

கச்சத்தீவு மீதான திமுக, காங்கிரஸ் கட்சிகளின் அடாவடித்தனம், நமது ஏழை எளிய மீனவர்கள், மீனவ பெண்களின் நலனை மிகவும் பாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Night
Day