ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த திட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

varient
Night
Day