எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் - SBI வங்கி அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்ற சூழல் காரணமாக, பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அந்த வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தங்களது அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும், டெபாசிட் இயந்திரங்களும் தங்கு தடையின்றி செயல்படுமென தெரிவித்துள்ளது. மேலும், ஏடிஎம் மையங்கள் செயல்படாது என சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்ப வேண்டாம் எனவும், மக்களின் வசதிக்காக 24 மணி நேரமும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்கள் திறந்திருக்கும் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

Night
Day