உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், யோகி ஆதித்யநாத் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் யோகி ஆதித்யநாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Night
Day