உத்தவ் தாக்கரே தரப்பு - காங்கிரஸ் - தேசியவா காங். இடையே தொகுதி உடன்பாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் சிவசேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

varient
Night
Day