உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு காரணமாக மீண்டும் நிலச்சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் சாமோலி மாவட்டம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலர் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் நிகழ்ந்த மேக வெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, அதேபோன்று சாமோலி மாவட்டத்தின் தாராளி மற்றும் சக்வாரா கிராமங்களில் மேகவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில், பலர் இடிபாடுகளில சிக்கி உள்ளதாக தெரிகிறது.

மேலும், மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day